சௌந்தர்யா ரஜினிகாந்த்-ன் ட்விட்டர் பதிவானது தற்பொழுது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவருக்கு சமீபத்தில் இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயரிடப்பட்டிருக்கின்றது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பிறந்தநாள் கொண்டாடிய சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் மகனுடன் அவர் உட்கார்ந்து இருக்க பின்னாடி ரஜினிகாந்த் ஸ்டைலாக நிற்கும் போட்டோவை பகிர்ந்து இருக்கின்றார். மேலும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, எனது பிறந்தநாளுக்கு நேரம் ஒதுக்கிய அனைவரும் மிக்க நன்றி. கடவுள் எனக்கு இந்த வருடம் சிறந்த பரிசை கொடுத்திருக்கின்றார். என் வீர் பாப்பா. மேலும் இந்த அற்புதமான கடவுளின் குழந்தை எப்பொழுதும் என் பின்னால் இருப்பது வாழ்க்கை உண்மையான வரம் என பதிவிட்டிருக்கின்றார். இவரின் இந்த பதிவை பார்த்த பலரும் கமெண்ட்ஸ் மற்றும் லைக்குகளை குவித்து வருகின்றார்கள்.
To every person who took time to wish me on my birthday yesterday 💜💜💜🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻THANK YOU SO SO SO MUCH.. . gods have blessed me with the best gift this year, my Veer papa 😇😘😘😇
And having this amazing gods child behind me always 💪🏻💪🏻💪🏻💪🏻😍😍😍 life is a true blessing!!! pic.twitter.com/9PuIVyyWgq— soundarya rajnikanth (@soundaryaarajni) September 21, 2022