Categories
சினிமா தமிழ் சினிமா

புது பொலிவுடன் “பாபா” படத்தின் கிளைமேக்ஸ்…. குஷியில் துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்…. வைரல் வீடியோ….!!!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ம் வருடம் பாபா திரைப்படம் வெளியானது. இந்த படம் தற்போது புதுப் பொலிவுடன் 20 வருடங்களுக்கு பின் ரஜினியின் பிறந்தநாளையொட்டி இன்று மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பாபா படம் ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டு டிக்கெட் புக்கிங் துவங்கியதுமே, ஹவுஸ்புல் போர்டு வைக்கும் அளவிற்கு டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கி குவித்து இருக்கின்றனர். இன்று பாபா படம் ரிலீஸ் ஆனதும் ஏதோ புது படத்துக்கு இணையாக கூடுவது போன்று திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி உள்ளது.

வழக்கம் போல ரஜினியின் அறிமுக காட்சி உள்பட பல முக்கியமான காட்சிகளை வீடியோவாக எடுத்து ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்தனர். அதிலும் குறிப்பாக மாற்றியமைக்கப்பட்ட பாபா கிளைமேக்ஸ் காட்சியை வைரலாக்கி வருகின்றனர். அப்போதைய அரசியல் நிலையை எண்ணி இமாலயத்தில் பாவாவை பார்த்துவிட்டு திரும்பக்கூடிய ரஜினிகாந்த் மீண்டுமாக பாபாவிடம் போகும் எண்ணத்தை மாற்றிக்கொள்வதோடு, பழைய பாபா திரைப்படத்தின் கிளைமேக்ஸ் இருக்கும். எனினும் தற்போது அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்திருக்கும் நிலையில், ரிலீஸ் ஆன பாபாவில் கிளைமேக்ஸ் மாற்றப்பட்டுள்ளது. இந்த புது கிளைமேக்ஸ் காட்சிக்காக சமீபத்தில் ரஜினி டப்பிங் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Categories

Tech |