vivo நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே vivo X போல்டு 5ஜி போல்டபில் ஸ்மார்ட்போனினை vivo அறிமுகம் செய்துள்ள நிலையில், vivo X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனிற்கான டீசரை vivo அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்நிலையில் vivo நிறுவனத்தின் துணை தலைவர் ஜியா ஜிங்டாங் புதிய vivo X போல்டு பிளஸ் 5ஜி மாடல் டீசரை சீன சமூக வலைதளமான வெய்போவில் வெளியிட்டுள்ளார். இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டிருக்கும் என தெரிகிறது.
புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மேம்பட்ட மற்றும் அதிக உறுதியான ஹின்ஜ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள ஹின்ஜ் டியுவி ரெயின்லாந்து சான்று பெற்றுள்ளது. புதிய vivo நிறுவனத்தின் துணை தலைவர் ஜியா ஜிங்டாங் X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 26-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக சீன சந்தையில் மட்டும் இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகமாக உள்ளது.