Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புது மருமகளுக்கு அதிரடி விருந்து… 101 வகையான உணவு… அசத்திய மாமியார்..!!

மாமியார் மருமகளுக்கு இடையே உள்ள உறவு சுமூகமாக இருந்தால் நிச்சயம் அந்த குடும்பம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். இதற்கு எடுத்துக்காட்டாக மதுரையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

மதுரையில் உள்ள முன்றுமாவடி என்ற ஊரைச் சேர்ந்த அஹிலா – அபுல்கலாம் ஆகிய இரு தம்பதியரின் மகன் அபுல்ஹசனுக்கு, சென்ற 9ம் தேதி ஷப்னா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கொரோனா பயம் மற்றும் ஊரடங்கு காரணமாக திருமணமான மணமக்கள் உறவினர் வீடுகளுக்கு விருந்துக்கு செல்ல முடியாத நிலை இருந்ததால், வீடு வந்த மருமகளுக்கு மாமியாரான அஹிலா தானே விருந்தளிக்க முடிவு எடுத்துள்ளார்.

இதனையடுத்து பிரியாணி, பிரைட் ரைஸ், சப்பாத்தி, புரோட்டா, மட்டன், சிக்கன், மீன், முட்டை, காடை, ஆம்லேட், சூப்புகள், பழ ஜூஸ்கள், அப்பளம் என 101 வகையான உணவு வகைகளை  சமைத்து தானே தன் கையால் மருமகளுக்கு ஊட்டியும் விட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் ஒரு குடும்பத்தில் உள்ள மாமியார் மருமகனுக்கு 67 வகையான உணவுகளை விருந்தளித்த மாமியாரின் வீடியோ ஒன்று வைரலான நிலையில், அதேபோல் மதுரையை சேர்ந்த மாமியார் ஒருவர் தன்னுடைய மருமகளுக்கு 101 வகையான உணவுகளை சமைத்து பரிமாறிய இந்த பிரமாண்ட விருந்து அனைவரையும் வியக்கவைத்ததாக அமைந்துள்ளது .

Categories

Tech |