Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புது மாப்பிள்ளை தற்கொலை…. போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் காரணம்…. தாயாரின் பரபரப்பு மனு….!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பூதப்பாண்டி மேலரத வீதியில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் வினிஷ்(30). இவருக்கும் இவரது உறவினர் பெண் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க நாள் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் வினிஷ் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து உறவினர்களுடன் தாய் உஷா நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், எனது மகன் வினிஷ் கேபிள் தொழில் செய்து வந்தான். வினிஷுக்கும் அதே பகுதி சேர்ந்த வக்கீல் ஒருவருக்கும் இடையே தொழில் ரீதியாக போட்டி இருந்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபரும் பூதப்பாண்டி போலீஸ் அதிகாரிகள் 2 பேரும் சேர்ந்து எனது மகனை போலீஸ் நிலையம் வரவழைத்து மிரட்டி இருக்கிறார்கள். அவனது தொழிலை விட்டுவிட்டு ஊரிலிருந்து ஓடிவிட வேண்டும் என்று கூறியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட வக்கீல் இரவு 12:30 மணி வரை போலீஸ் நிலையத்திலிருந்து எனது மகனை ஒழித்து கட்டுவது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி வினிஷ் மீது பொய் வழக்கு போட்டு 15 நாட்கள் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்து ஜாமினில் வெளிய வந்த நிலையில் சம்பந்தப்பட்ட 3 பேரும் சேர்ந்து மீண்டு ஒரு பொய் வழக்கு பதிவு செய்து விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றனர்.

அதனை தொடர்ந்து மீண்டும் வெளியே வந்து திருநெல்வேலி கோர்ட்டில் காலை மற்றும் மாலையில் கையெழுத்து போட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி கையெழுத்து போட்டு விட்டு வரும் வழியில் சம்பந்தப்பட்ட வக்கீல் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சேர்ந்து வினிசை மிரட்டி இருக்கிறார்கள். இதனால் மரணம் வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு எனது மகன் தற்கொலை செய்து கொண்டான். எனவே எனது மகன் தற்கொலைக்கு காரணமாக இருந்த 3 பேரும் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த உஷா திடீரென அங்கு மயங்கி விழுந்தார். அப்போது அங்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையிலான போலீஸ் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் உஷாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் உஷாவே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அவருடைய உறவினர்கள் விடவில்லை. அவர்களே முதல் உதவி அளித்தனர். இதனால் போலீசாருக்கும் மனு அளிக்க வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |