Categories
சினிமா தமிழ் சினிமா

புது முக நடிகையுடன்…. ஹீரோவாக நடிக்கும் சூர்யா பட நடிகர்…! ரசிகர்கள் எதிர்பார்ப்பு …!!

நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிக்கயுள்ள புதிய படத்தில் சூர்யா பட நடிகர் ஹீரோவாக  அறிமுகமாகயுள்ளார்.

பிரபல பின்னணி பாடகியாக வலம் வரும் ஜோனிடா காந்தியும், சூரரைப்போற்று படத்தில் நடிகர் சூர்யாவின் நண்பராக நடித்த கேகேயும், ஜோடியாக திரைப்படத்தில் அறிமுகமாகி  இணைய உள்ளனர். இந்த படம் வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என்ற தலைப்பில் உருவாகிறது.இப்படத்தை  பிரபல தமிழ் நடிகையான நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நடத்திவரும் ரவுடி பிச்சர் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளனர்.

இதனையடுத்து, இப்படத்தை அறிமுக இயக்குனரான விநாயக் என்பவர் இயக்கவுள்ளார். அறிமுக நடிகர், நடிகை  மற்றும் இயக்குனரை வைத்து தயாரிக்கும் இந்த படம் புதுவித கதைக்களத்தை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இப்படத்திற்கான படப்பிடிப்புகளை பிப் 27 ல் தொடங்கியுள்ளனர்.

Categories

Tech |