நமக்குள் இருப்பது அண்ணன் தம்பி பிரச்சனை நாம் ஒற்றுமையுடன் வேலை செய்ய வேண்டுமென அமைச்சர் வேலுமணி கூறியுள்ளது ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆன நிலையில், நேற்று தமிழகம் திரும்பினார்.
இந்நிலையில் நம் எதிரி திமுக, நமக்குள் இருப்பதை அண்ணன் தம்பி பிரச்சனை நாம் ஒற்றுமையுடன் வேலை செய்ய வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். சசிகலாவை 100% சேர்க்க மாட்டோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறி வரும் நிலையில், அண்ணன் தம்பி பிரச்சனை என்று வேலுமணி பேசியது புதிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கை பாத்திரமாக இருக்கும் ஒருவர் இப்படி பேசுவது ஆர் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பதற்றம் அடைந்துள்ளனர்.