ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டு தொடர்பான விதிமுறைகளை மாற்றி உள்ளது. இந்த விதிமுறைகளை ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் சில விதிமுறைகளை அமல்படுத்த கூடுதல் அவகாசம் வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் பல நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. எனவே விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான கடைசி தேதியை அக்டோபர் 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் என்னென்ன சொல்கின்றன? டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு தொடர்பான விதிமுறைகள் என்னென்ன? அமலுக்கு வருகின்றன என்பது குறித்து பார்க்கலாம்.
ஒரு வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு 30 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்யப்படவில்லை என்றால், கார்டை ஆக்டிவேட் செய்வதற்கு முன் அவரிடம் OTP Password வழியாக ஒப்புதல் பெற வேண்டும். வாடிக்கையாளரிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் 7 நாட்களுக்குள் கிரெடிட் கார்டு கணக்கு மூடப்பட வேண்டும்.
வாடிக்கையாளரிடம் சொல்லப்பட்ட கிரெடிட் கார்டு லிமிட்டை அவர் ஒப்புதல் இல்லாமல் மாற்றக்கூடாது. மேற்கூறிய விதிகளை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என கார்டு நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.