Categories
மாநில செய்திகள்

புது ரேஷன் கார்டு பெற இனி கவலையில்லை…. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.  மேலும் குடும்ப அட்டை  இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இவ்வாறு புதிதாக ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வசதியாக tnpds.gov.in என்ற இணையதளம் பயன்பாட்டில் இருக்கிறது. இதில் ரேஷன் கார்டு விண்ணப்பிக்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் பெயர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார், முகவரி சான்று உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனையடுத்து அதிகாரிகள் இணையதளத்தின் வாயிலாக சரிபார்த்து வீடுகளுக்கு கள ஆய்வு ஊழியர்களை அனுப்பி கார்டு வழங்க பரிந்துரை செய்வார்கள். இந்த நிலையில் ஒரு சிலரிடம் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் சூழலும் நிலவுகிறது. இதனால் விண்ணப்பதாரர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இனிமேல் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி விண்ணப்பத்தை நிராகரிக்க முடியாது. அதற்காக மறுபரிசீலனை விண்ணப்பம் என்ற புதிய வசதி சேர்க்கப்படுகிறது. எனவே தேவைப்படும் ஆவணங்கள் குறித்த விவரம் மெசேஜ் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். பின்னர் செல்போன் எண்ணிற்கு அனுப்பப்பட்ட குறியீட்டு எண்ணை பயன்படுத்தி மறுபரிசீலனை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

அந்தப் பக்கம் திறந்ததும் செல்போன் எண்ணை பதிவு செய்து ஓடிபி எண்ணை பதிவிட வேண்டும். இதற்கு அடுத்து வரும் பக்கத்தில் தேவைப்படுபம் ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம். இதன் பின்னர் சம்பந்தபட்ட அதிகாரிகள் அடுத்தகட்ட செயல்பாடுகளுக்கு ஒப்புதல் அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர். எனவே இந்த புதிய வசதியானது பொதுமக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |