Categories
ஆட்டோ மொபைல்

புது லோகோவுடன் வரும் மஹிந்திரா நிறுவன கார்…. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்….!!

Mahindra நிறுவனம் தனது புது லோகோவை அனைத்து மாடல்களிலும் வழங்கும் பணிகளை தொடங்கியுள்ளது. Mahindra-வின் புது லோகோ XUV700, ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N என மூன்று மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் Mahindra பொலிரோ நியோ மாடலும் விரைவில் புது லோகோவுடன் விற்பனைக்கு வருவதாக தகவல் வெளியானது. இந்த மாடல் காரில் Mahindra நிறுவனத்தின் புதிய ட்வின் லோகோ, காரின் கிரில், வீல் மற்றும் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவைகளில் புதிய பேட்ஜ் இடம்பெறுகிறது.

இந்த காரை சுற்றி புது லோகோ தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் Mahindra பொலிரோ நியோ மாடலில் 1.5 லிட்டர், 3 சிலிண்டர்கள் கொண்ட எம் ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 100 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்ட  என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |