பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
பிரிட்டனில் புதிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இப்புதிய வைரஸ் கண்டறியப்பட்டது உறுதியானதிலிருந்து பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் இது பரவாமல் தடுக்க பிரிட்டன் விமானங்கள் உட்பட பல போக்குவரத்து சேவைகளுக்கு தடை விதித்து வருகிறது. மேலும் சுவிற்சர்லாந்தில் விமான நிலையத்திலேயே பல பிரிட்டன் மக்கள் தனிமையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து லண்டன் உட்பட பல பகுதிகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியா, கனடா பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளும் பிரிட்டனிலிருந்து வரும் விமான போக்குவரத்துக்கு தடை அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து இலங்கையும் நாளை அதிகாலை முதல் அறிவிப்பு வரும் வரை இந்த தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது.