தமிழகத்தில் இந்த புத்தாண்டு உதயசூரியன் ஆண்டாக மலரட்டும் என்று ஸ்டாலின் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் புத்தாண்டில் புது விடியல் நிச்சயம், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி என்ற இலக்கை அடைந்தே தீருவோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இருடா தமிழகத்திற்கு மீண்டும் வெளிச்சம் வர திமுகவினால் முடியும் என்பதை மக்கள் நம்புகிறார்கள். வெளிச்ச விளக்குகளை ஊதி அணைத்து விடலாம் என அதிகாரத்தில் இருப்பவர்களை கைகோர்த்து செயல்படுகிறார்கள். உதயசூரியன் என்ற உலகின் ஒளி விளக்கை எவராலும் அணைக்க முடியாது. உழைப்பால், தோழமை கட்சிகளுடான ஒருங்கிணைப்பாளர் இந்த புத்தாண்டு உதயசூரியன் ஆண்டாக மலரட்டும் என அவர் கூறியுள்ளார்.