Categories
தேசிய செய்திகள்

“புது விதமான போட்டோ ஷூட்” தொழிலாளர்களாக புதுமண தம்பதிகள்…. குவியும் பாராட்டு…!!

புதுமணத்தம்பதிகள் ஒருவர் செய்யும் தொழிலை மதிக்கும் விதமாக போட்டோ ஷூட் உருவாக்கியுள்ளது நெட்டிசன்களின் பாராட்டை பெற்றுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த தற்போது திருமணமான தம்பதிகள் தங்களது திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டை வித்தியாசமான எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். எல்லோருக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் நம் திருமணமும் ஒன்று. இதனால் திருமணத்தின் போது ஒவ்வொருவரும் அவர்களின் வசதிக்கேற்ப போட்டோ ஷூட் எடுப்பார்கள். சமீபத்தில் கேரளாவில் உள்ள தம்பதிகள் கிளாமராகவும், மாடெர்னாகவும் போட்டோ ஷூட் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால் தற்போது அதற்கு மாற்றாக செய்யும் தொழிலுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் கேரளாவில் உள்ள ஒரு புதுமணத்தம்பதியினர் புது விதமாக போட்டோ ஷூட் ஒன்றை எடுத்துள்ளன. அதில் கட்டிடத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களாகவே மாறி உருவாக்கியுள்ளனர். இந்நிலையில்  இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியானதையடுத்து நெட்டிசன்களின் பாராட்டை பெற்றுள்ளது.

Categories

Tech |