Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

புது வீட்டிற்காக வாங்கிய பொருள்…. மர்ம நபர்களின் செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!

ஜன்னல் மற்றும் கதவுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கட்டணஞ்செவல் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் புது வீட்டிற்கு தேவையான 6 மர ஜன்னல்கள், நிலகதவுகள் போன்றவற்றை வேல்முருகன் வாங்கி வைத்துள்ளார்.

நேற்று காலை புது வீட்டிற்கு சென்று பார்த்த போது வாங்கி வைக்கப்பட்டிருந்த கதவு மற்றும் ஜன்னல்கள் காணாமல் போனதை கண்டு வேல்முருகன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வேல்முருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |