Categories
சினிமா தமிழ் சினிமா

புது வீட்டில் தனுஷ் -ஐஸ்வர்யா?…. லீக்கான தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

நடிகர் தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதியினர் சென்ற சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். மேலும் இரண்டு பேரும் அவரவர் பாதையில் பயணிக்க போவதாக கூறினர். இச்செய்தி அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கிடையில் அவர்களது குடும்பத்தினர் பல்வேறு முயற்சியை செய்தும் இருவரும் ஒன்றிணையவில்லை என்று தகவல் வெளியானது. இதையடுத்து சமீபத்தில் தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதியினர் மீண்டும் இணையப் போவதாக கூறப்பட்டு வருகிறது.

எனினும் இது தொடர்பாக தனுஷ் – ஐஸ்வர்யா இரண்டு பேரும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனிடையில் நடிகர் தனுஷ் கட்டிவரும் பிரம்மாண்ட வீட்டின் முழுபணிகளும் ஜனவரி மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் அந்த வீட்டுக்கு தனுஷ் தன் மனைவியுடன் இணைந்து குடிபோக இருக்கிறாராம். இதன் வாயிலாக வரும் ஜனவரி மாதம் இருவரும் தங்களுடைய விவாகரத்து ரத்துசெய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |