Categories
தேசிய செய்திகள்

புது ATM கார்டு வேணுமா…? இனி வீட்டிலிருந்தே விண்ணப்பித்து…. உடனே வாங்கிக்கலாம்…!!!

எஸ்பிஐ வங்கியில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து போனாலோ? அல்லது திருடு போனாலோ பிரச்சனை இல்லை. ஏனெனில் அதனை உடனடியாக பிளாக் செய்துவிட்டு புதிதாக ஏடிஎம் கார்டு வாங்கிக் கொள்ளலாம். அதற்காக நீங்கள் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டியது கிடையாது.  வீட்டிலிருந்து கொண்டே செல்போன் மூலமாக ஈஸியாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு முதலில் எஸ்பிஐ வங்கியின் நெட் பேங்கிங் வசதியில் சென்று e-services என்ற பிரிவில்  ATM card services என்பதை கிளிக் செய்து புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். “Request ATM/Debit Card” என்று கொடுத்தவுடன் உங்களது செல்போனுக்கு ஒரு OTP வரும். அதைப் பதிவிட்டால் உங்களின் முகவரிக்கே இந்தியா போஸ்ட் மூலமாக இந்த கார்டு அனுப்பி வைக்கப்படும்.  உங்களது முகவரி சரியாக இல்லாவிட்டால் ATM கார்டு வங்கிக்கே திரும்பிச் சென்றுவிடும். எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாகவும் நீங்கள் ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |