Categories
மாநில செய்திகள்

புத்தகப் பையில்…. அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை அச்சிட வேண்டாம்… உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!!

பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் கட்சித் தலைவரின் படத்தை அச்சிட்டு அரசு நிதியை தவறாக பயன்படுத்தக்கூடாது சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரது படங்களுடன் அச்சிடப்பட்டிருக்கும் நோட்டுப் புத்தகங்கள், பைகள் கிடப்பில் போடப்பட்டதாகவும், அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டதாகவும் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வழக்கு தொடரப்பட்டது..

அந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, ஏற்கனவே அச்சிடப்பட்ட 64 லட்சம் புத்தக பைகள், 10 லட்சம் எழுது பொருட்கள் கிடப்பில் போடப்பட்டு வீணாக்கப்படாது.. சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க படும்.. அது போன்று புத்தக பைகள், மாணவர்கள் பயன்படுத்தும் எழுது பொருட்களில் அரசியல் தலைவர்கள் படம் அச்சிடுவதை முதல்வர் விரும்பவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது..

இவற்றை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, இது போன்ற தலைவர்களின் படங்களை பாடப்புத்தகத்தில் நிறுத்தப்பட வேண்டும். பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் கட்சித் தலைவரின் படத்தை அச்சிட்டு, அரசு நிதியை தவறாக பயன்படுத்தக்கூடாது. இந்த நடைமுறை இனியும் தொடராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.. இதற்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது.

 

Categories

Tech |