இந்தியா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் என பெங்குயின் ராண்டம் ஹவுஸ் என்ற வெளியீட்டாளர் அறிவித்துள்ளது. ‘மேடம் பிரசிடென்ட்: எ பையோகிராஃபி ஆஃப் திரௌபதி முர்மு’ என்ற புத்தகம், குடியரசுத் தலைவர் பதவிக்கு வரும் வரை முர்முவின் வாழ்க்கையை சொல்கிறது.
நாட்டின் மிக உயர்ந்த நிலையை எட்டியதன் பின்னணியில் உள்ள வலிகள், துன்பங்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகள், உறவுகள் ஆகியவை புத்தகத்தில் உள்ளன. புவனேஸ்வரைச் சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் சந்தீப் சாஹு இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். பழங்குடியினப் பெண் ஒருவர் இந்திய குடியரசுத் தலைவராகப் பதவியேற்றது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். அவர்களைப் பற்றி புத்தகம் தயாரிப்பது தலைமுறையின் தேவை என்று சந்தீப் சாஹு பதிலளித்தார்.