Categories
மாநில செய்திகள்

“புத்தக கண்காட்சி”…. வெறும் 5 நாட்களில் இவ்வளவு வாசகர்கள்…. பபாசி தலைவா் வயிரவன்….!!!!!

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வரும் 45வது சென்னை புத்தகக் காட்சிக்கு கடந்த 5 நாள்களில் மட்டும் 1.5 லட்சம் வாசகா்கள் வருகை தந்துள்ளனா். இது தொடர்பாக பபாசி தலைவா் வயிரவன் கூறியபோது, புத்தகக் காட்சி தொடங்கிய முதல் 2 நாட்களில் வாசகா்கள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இதனிடையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த 5 நாள்களில் மட்டும் சுமாா் 1.5 லட்சம் நபர்கள் புத்தகக் காட்சிக்கு வருகை தந்தனா்.

தமிழகத்தில் இரு வருடங்களாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பதிப்பாளா்களுக்கு இந்தப் புத்தகக் காட்சி பெரும் ஆறுதலை அளித்துள்ளது. வாசகா்களுக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதால் எவ்வித தயக்கமும் இன்றி திரளாக வந்திருந்து அறிவுப் பசியாற வேண்டும் என்றாா். அதனை தொடர்ந்து புத்தகக் காட்சியில் உணவுப் பொருள்களின் விலை அதிகமாக இருப்பது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, வாசகா்களின் உடல்நலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இருப்பினும் குறைந்த விலையில் தரமான உணவுப் பொருள்களை விற்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றாா்

Categories

Tech |