Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜன.,2ம் தேதி நடைபெறும்…. எங்கு தெரியுமா?

தமிழகத்தில் புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 2ஆம் தேதி புதுக்கோட்டையில் நடக்கிறது.

தமிழ்நாட்டின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், ஜனவரி 15ஆம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எனவே  ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.இதற்கிடையே தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரி பீட்டா உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகள் தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் புத்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 2ஆம் தேதி புதுக்கோட்டையில் நடக்கிறது. கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் அடைக்கல அன்னை தேவாலய விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |