அடுத்த வருடம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளது. புதுவருடப் பிறப்பை முன்னிட்டு மக்கள் தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், புதுவருடத்தை வரவேற்கும் விதமாகவும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள். இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள தங்கும் விடுதிகளில் இருப்பவர்கள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதால் வன விலங்குகள் அச்சமடையும். எனவே தடை விதிப்பதாக வனத் துறை அறிவித்துள்ளது.
Categories