Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டில் பெரும் சோகம்…. 12 பேர் உயிரிழப்பு…. விசாரணைக்கு கவர்னர் உத்தரவு….!!!

ஜம்மு காஷ்மீரில் கத்தார் நகரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் யாத்திரையாக வந்து தரிசனம் செய்வார்கள். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி பவன் பகுதி அருகில் உள்ள கோவில் பக்தர்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். அதில் ஒரு பிரிவினர்களிடையே 2.45 மணிக்கு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அதன்பிறகு தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தள்ளி விட்டுள்ளனர்.

அப்போது  திடீரென கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த நெரிசலில் பலர் சிக்கி காயமடைந்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இது பற்றி சமூக சுகாதார மையத்தின் மருத்துவர் கோபால் தத் கூறியது, கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை நாராயண மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இது நிகழ்வு குறித்து விசாரணைக்கு ஜம்மு கஷ்மிர் கவர்னர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |