Categories
தேசிய செய்திகள்

“புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கர்நாடக அரசு கடும் கட்டுப்பாடு”…? ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு …!!!!!

சீனா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. நமது நாட்டிலும் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகாவை பொருத்தவரை கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை உத்தரவின் பேரில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் பெங்களூர் உட்பட மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று பெலகாவியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

வருவாய்த்துறை மந்திரி அசோக் மற்றும் சுகாதார துறை மந்திரி சுதாகர் தலைமையில் பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் வைத்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கியமாக ஆலோசனை முடிவு எடுக்கப்பட உள்ளது. அதிலும் குறிப்பாக முக கவசம் அணிவதை கட்டாயமாக்குவது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. அதேசமயம் மத்திய சுகாதாரத்துறை உத்தரவின் பெயரில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கவும், அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை அனுப்பி வைப்பது குறித்தும் தீர்மானிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் செய்தியாளர்களிடம் பேசிய போது, “கர்நாடகாவில் கொரோனா பரவலை  தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது பற்றிய மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பெலகாவியில் நடைபெற உள்ள கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் புத்தாண்டுக்கு தனியாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது குறித்து ஆலோசிக்கப்படும். பெங்களூருக்கு தனியாக வழி காட்டு நெறிமுறைகள் குறித்து வெளியிடுவதும் ஆலோசிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |