Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை…..  தமிழக அரசு முடிவு….? வெளியாகும் தகவல்….!!!

இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15 வரை அமலில் இருக்கும். அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். மேலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் உலக நாடுகளில் உருமாறிய ஒமைக்ரான் பரவி வருகின்றது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தொற்று பரவியுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஒமைக்ரானை தமிழகத்தில் கொண்டுவராமல் தடுக்க இந்த முடிவு எடுக்க உள்ளதாக தெரிகின்றது. எனவே உங்கள் நியூ இயர் பிளானை யோசித்து முடிவெடுங்கள்.

Categories

Tech |