Categories
மாநில செய்திகள்

“புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிகளை மீறினால் நடவடிக்கை”… காவல் ஆணையர் எச்சரிக்கை…!!!!!!

சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 29-ஆம் தேதி சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தபட உள்ளது. அதேபோல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் பற்றி அறிவுறுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |