Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. சுற்றுலா பயணிகளுக்கு…. காவல் துறை அதிரடி சோதனை…!!!

புதுச்சேரி மாநிலத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் இருந்து பல்வேறு வாகனங்கள் மூலம் சுற்றுலா பயணிகள் நேற்று காலை முதல் புதுச்சேரிக்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுபடி, 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே புத்தாண்டு கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி, தமிழக எல்லைப் பகுதியான மதகடிக்பட்டு உள்ளிட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்களை காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சோதனை சாவடியில் புதுச்சேரிக்கு வரும் வாகனங்களில் உள்ள பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசாரின் இந்த பரிசோதனை இன்று இரவு வரை நடைபெறும். மேலும் இரண்டாவது தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அங்கு ஒரு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |