Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. இளவட்ட கல்லை தூக்கி இளைஞர்கள்…. நடைபெற்ற பல்வேறு போட்டிகள்…!!

புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில்  தளக்காவூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதே போல் நேற்றும் கத்தோலிக்க இளைஞர் மன்றம் சார்பில் போட்டிகள் நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கு 50 மீட்டர் ஓட்டம், பெண்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், முறுக்கு சாப்பிடுதல், பலூன் உடைத்தல், பாட்டில்களில் நீர் நிரப்புதல்   போன்ற போட்டிகள் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து ஆண்களுக்கு 1000 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், இளவட்டக்கல் தூக்குதல் போன்ற பிரிவுகளில் பல்வேறு  போட்டிகள் நடைபெற்றுள்ளது . இதில் ஏராளமான இளைஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி வெற்றி பெற்றுள்ளனர். அதன்பின் வெற்றி பெற்ற பெண்கள் மற்றும்   இளைஞர்களுக்கு கத்தோலிக்க இளைஞர் மன்றம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |