நாமக்கல் துணை போலி சூப்பிரண்டு சுரேஷ் சமீபத்தில் வெளியிட்ட செய்து குறிப்பில் கூறியிருப்பதாவது, நாமக்கல் உட்கோட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் புத்தாண்டு தினத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்துள்ளனர்.
இதனையடுத்து மது போதையில் வாகனம் ஓட்டினால் வழக்கு பதிவு செய்து, வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும் நகரின் முக்கிய இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், பைக்ரேஸ் போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் இலவச தொலைபேசி எண் 100-ஐ தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.