சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடற்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
சென்னை மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை கடற்கரைக்கு மக்கள் செல்லகூடாது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். கடற்கரையை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்களை நிறுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது எனவும், பண்ணை வீடுகள், கிளப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஒன்றாக கூடி புத்தாண்டு நிகழ்ச்சிகளை கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் அனைத்து ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தில் பைக் ரேஸ் மற்றும் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.