புதுச்சேரியில் அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டை கொண்டாட அனுமதி அளித்து முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனால் பொதுமக்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டை கொண்டாட அனுமதி அளித்து முதல்வர் நாராயணசாமி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மேலும் மக்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடலாம். விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட 200 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை இரவில் கொண்டாட தடை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.