Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட ஒரு மணிநேரம் நீட்டிப்பு…. மாநில அரசு அறிவிப்பு…. மக்கள் மகிழ்ச்சி…!!!

குறிப்பாக வருடம் தோறும் முக்கியமான அறிவிப்புகளை ஒவ்வொரு புத்தாண்டுகளிலும் காவல்துறை சார்பில் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடங்களுக்கான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய சூழல் இருக்கிறது. அந்த வகையில் தற்போது கொரோனா தொற்று வெளிநாடுகளில் பரவி வரக்கூடிய சூழ்நிலையில் கொண்டாட்டங்கள் இருக்குமா? இருக்காதா என்று மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில்  புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு 1 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக ஒரு மணிநேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால் அதிகாலை 2 மணிவரை புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும். பொதுமக்கள். சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் புத்தாண்டு கொண்டாட 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Categories

Tech |