Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு பரிசு: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்?…. விரைவில் வெளியாகும் சூப்பர் குட் நியூஸ்….!!!!!

2023 புத்தாண்டு முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நல்ல செய்திகளை கொண்டுவருகிறது. அந்த வகையில் 2023ம் வருடத்தில் பல்வேறு பெரிய முடிவுகளுக்கு அரசாங்கம் தன் ஒப்புதலை வழங்க முடியும். அதன் ஒருபகுதியாக புத்தாண்டின் துவக்கத்திலேயே ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இது தவிர்த்து ஊழியர்கள் குறித்த 3 பெரிய பிரச்னைகளில் அரசு முக்கிய முடிவெடுக்கலாம். இதில் மிகப் பெரிய நன்மை சம்பளம் தொடர்பானது ஆகும். இதனிடையில் ஃபிட்மென்ட் பேக்டருக்கான நீண்ட நாள் கோரிக்கை இருக்கிறது. இது தொடர்பாக 2023ம் வருடம் அரசு முடிவெடுக்கலாம்.

2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பிட்மென்ட் காரணி பரிசாக வழங்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது தவிர்த்து அகவிலைப்படி, பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றியும் முடிவுவெடுக்கலாம். புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை இல்லாத மிகப் பெரிய பரிசு கிடைக்கவுள்ளது. முதல் அகவிலைப்படி, HRA, TA, பதவி உயர்வுக்குப் பின், ஃபிட்மென்ட் பேக்டர் பற்றியும் அடுத்த வருடம் விவாதிக்கலாம்.

அந்த அடிப்படையில் ஊழியர்களின் சம்பளத்தை ரூபாய். 8000 உயர்த்துவது பற்றி அரசு நேரடியாக பரிசீலிக்கலாம். இதில் ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிப்பது அரசு ஊழியர்களின் அடிப்படையை பலப்படுத்தும். இப்போது 7வது ஊதியக் குழுவின் கீழ் குறைந்தபட்சம் ஊதியம் ஆக 18,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அடுத்த வருடம் பிப்ரவரி 1, 2023-ல் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டுக்கு பின் மத்திய ஊழியர்களின் இந்த கோரிக்கை பற்றி அரசு முடிவெடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |