இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக தொழில் நிறுவனங்கள் இதுவரையிலும் காணாத சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தங்கம் விலையானது உயர்வை கண்டு வருகிறது. இந்தியாவில் பெண்கள் தங்க நகைகள் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆகவே தங்கம் விலை உயர்வது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக நகை விலை பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் அதிகரிக்கிறது.
இதனால் திருமணத்துக்கு நகை வாங்க எண்ணிக் கொண்டிருப்பவர்கள் விலை ஏற்றத்தால் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் முதல் தங்கம் விலை சற்று குறைந்து வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நேரங்களில் நகை விலை குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இதனையடுத்து இன்றும் நகை விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரத்தின்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூ குறைந்து 36,216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் 4,527-ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதன்பின் வெள்ளி கிராமுக்கு 66.30ரூபாயாகவும், கட்டி வெள்ளி கிலோ 66,300-ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.