Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு முதல் ATM-ல் பணம் எடுத்தால்…. புதிய கட்டணம் அமல்….!!!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது.

வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு பெரும்பாலும் ஏடிஎம் மையங்களை நாடுவோம் . ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்திலும் நம்மால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு சில விதி முறைகள் மட்டும் உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு மாதத்திற்கு இவ்வளவு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி ATM மையங்களில் பணம் எடுப்பதற்கான பரிவர்த்தனை கட்டணம் இதற்கு முன் 20 ரூபாய் வசூல் செய்யப்பட்டிருந்த நிலையில் இப்போது புத்தாண்டு முதல் 21 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ஐந்து முறை இலவசமாக பணமெடுக்கலாம். அதே போன்று மற்ற வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதாக இருந்தால் மெட்ரோ நகரங்களில் மூன்று முறையும்,  மெட்ரோ இல்லாத நகரங்களில் ஐந்து முறையும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ள முடியும் என்பது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் ஆகும்.

Categories

Tech |