இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியிள் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டை முன்னிட்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா புதிய சலுகையை அறிவித்துள்ளது.
புத்தாண்டு நேரத்தில் வாகனக் கடன், தனிநபர் கடன், தங்கக் கடன் ஆகியவற்றை பெறுபவர்களுக்கு செயலாக்க கட்டணம் (processing fee) கிடையாது என்று அறிவித்துள்ளது. இந்த லோன்களை நீங்கள் SBIஇன் அதிகாரப்பூர்வ அப்ளிகேஷனான YONO மூலமே பெற்றுக் கொள்ளலாம்.