புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னைவாசிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். அதன்படி நடப்பு ஆண்டு மரணமில்லாத புத்தாண்டாக அனுசரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முக்கிய சாலையான காமராஜ் சாலை, வாலாஜா சாலை உள்ளிட்டவைகளில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதியில்லை. இதையடுத்து நடமாடும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அமைக்கப்படும். அதன்பின் பைக்ரேசிங் கட்டுப்பாடுகள் அதிகம் கண்காணிக்கப்படும்.
இதுவரையிலும் 360 வண்டிகளை பறிமுதல் செய்து உள்ளோம். கடற்கரையில் கூட்டம் போடுவதற்கு தடையில்லை. எனினும் கொரோன கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். சென்னையிலுள்ள பாலங்கள் அனைத்தும் மூடப்படும். 300-க்கும் அதிகமான தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்படும். ஜீரோ ஃபெடாலிட்டி நைட் என்பது தான் எங்களின் நோக்கம் ஆகும். நல்ல விஷயத்தில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் காவல்துறையினர் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்