புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களான தாணுமாலய சாமி கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், அழகம்மன் கோவில், பகவதி அம்மன் கோவில், வெங்கடாஜலபதி கோவில் உள்ளிட்ட கோவில்களில் புத்தாண்டை முன்னிட்டு காலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம் ஆதாரணை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தவாறு சாமியை தரிசனம் செய்துள்ளனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு காலையில் கோவில் நிர்வாகம் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.