மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் விபத்துக்களை தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் மொத்தமாக 93 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டும், 31 தனிப்படையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் 78 இருசக்கர வாகனத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனவே இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.