Categories
இந்திய சினிமா சினிமா

புத்துணர்வு கொடுக்கும் “சர்க்கஸ்”…. பூஜா ஹெக்டே நம்பிக்கை…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

சென்ற 2 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியாகிய அல வைகுந்தபுரம்லோ திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த பூஜாஹெக்டே, அதில் புட்டபொம்மா என்ற சூப்பர் ஹிட் பாடலுக்கு டான்ஸ் ஆடி தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய அளவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். எனினும் நடப்பு ஆண்டு பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சார்யா என அவர் நடித்த திரைப் படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியை தழுவியது.

இந்நிலையில் ஹிந்தியில் பூஜா ஹெக்டே நடித்திருக்கும் “சர்க்கஸ்” படம் வருகிற டிச..23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ரன்வீர்சிங் கதாநாயகனாக நடிக்க, இன்னொரு கதாநாயகியாக ஜாக்குலின் பெர்னான்டஸ் நடித்து உள்ளார். பிரபல டிரைக்டர் ரோஹித் ஷெட்டி இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பூஜா ஹெக்டே பேசியதாவது, “இந்த ஆண்டு பாலிவுட் சினிமா மிகப் பெரிய அளவில் வெற்றிகளை பார்க்காமல் ரொம்பவே தளர்ந்துபோய் இருக்கிறது. இதனால் அதற்கு புத்துணர்வு கொடுக்கும் வகையில் இந்த சர்க்கஸ் படத்தின் வெற்றி அமையும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |