கங்கைநீர் அசுத்தம் அடைந்துள்ளதால் குளிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பகுப்பாய்வு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில் கங்கை நீர் குளிப்பதற்கு மட்டும் பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நதியை பாதுகாக்கவும், நீக்கவும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்றைய அமர்வில் கங்கை நீர் குடிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கங்கையில் மத வழிபாடு என்ற பெயரில் ஏராளமான குப்பைகளை கங்கையில் கொட்டுகிறார்கள்.
அதனால் கங்கை அசுத்தமாகி வருகிறது.அதற்கான சுத்தப்படுத்த பணிகளையும் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தாலும் அதனை மீட்கவே முடியவில்லை. அதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில், கங்கை நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்றும் சரியான சுகாதாரம் இல்லாததால் உடலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கங்கை நீரை குளிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் மிகவும் புனிதமான நீராக கருதப்படுவது கங்கை. தற்போது நீதிமன்றம், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்த அலட்சியத்தால் அது குடிப்பதற்கு ஏற்ற நீர் அல்ல என்பது போல கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதனால் கங்கை தனது புனிதத்தை இழந்து விட்டதா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே இயற்கை முறையில் உருவான புனித நீரான கங்கை அசுத்தமாகியுள்ளது. அதனால் அரசின் ஆலோசனைகளுக்கு ஏற்ப பொதுமக்களாகிய நாம் இதுபோன்ற அசுத்தங்களை செய்யாமல் கங்கையை போற்றிக் காக்க வேண்டும்.
சமீப காலமாக சுற்றுச் சூழல் சார்ந்த கருத்துக்களை பல பிரபலங்கள் பேசிவருகிறார்கள். உலகின் பல பகுதிகளில் இயற்கையை அழிப்பதன் மூலம் மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இனி வரக்கூடிய காலங்களில் குடிநீர் தேவைக்காக தான் பிரச்சனை என்பது அதிகமாக வரப்போகிறது. இந்தியாவை பொறுத்த வரையில் கங்கை போன்ற ஏராளமான நதிகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது.இதுபோன்ற நன்னீர்களை அசுத்தப்படுத்தி வருங்காலத்தில் பிரச்சினைகளை சந்திப்பதற்கு பதிலாக அவற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இயற்கை மீண்டும் தனது இயல்பு நிலைக்கு மாற நாமும் நமது பங்கை செலுத்துவோம்.