கங்கை நீரை குளிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று உபி மாநில மாசு கட்டுப்பட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கங்கை நதியில் சென்று குளித்தால் நாம் செய்த பாவம் எல்லாம் போய் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அவ்வளவு புனிதமானது கங்கைநீர். ஆனால் தற்போது கங்கை நதியில் அசுத்தம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. தற்போது கூட ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியது. இளைஞர்கள் சிலர் திமிங்கலம் ஒன்றை கோடரியால் தாக்கி கொடூரமாக கொலை செய்து ரத்தக்காடாக மாற்றி கங்கையின் புனிதத்தையே கெடுத்தனர்.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் பகுப்பாய்வு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில் கங்கை நீர் குளிப்பதற்கு மட்டும் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நதியை பாதுகாக்கவும், மீட்கவும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் நேற்றைய அமர்வில் கங்கை நீர் குடிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.