Categories
தேசிய செய்திகள்

புனித் உண்டாக்கிய தாக்கம்…. 30 பேரின் வாழ்வில் ஒளி…. குவியும் கண் தானம்…!!!

நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்த தகவல் உறுதி செய்யப்பட்ட பிறகு அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன. அந்த கண்கள் கண்பார்வையற்ற 4 பேருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. அவர் இறந்த பிறகு 4 பேருக்கு இந்த உலகை காண ஒளி கொடுத்துள்ளார். அவர் கண்கள் தானம் செய்தது கர்நாடகத்தில் மக்களிடையே குறிப்பாக அவரது ரசிகர்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதனால் மாநிலத்தில் கண்களை தானம் செய்வதாக கூறி தங்களின் பெயர்களை பதிவு செய்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கூறிய நாராயண நேத்ராலய மருத்துவமனையின் மருத்துவர் புஜங்கஷெட்டி, “முன்பு ஒரு நாளைக்கு 3 முதல் 4 பேர் மட்டுமே எங்கள் மருத்துவமனையில் கண்களை தானம் செய்தனர். ஆனால் அந்த எண்ணிக்கை தற்போது 200-ஐ தாண்டியுள்ளது. முன்கூட்டியே பதிவு செய்யாமல் இறப்பவர்களிடமிருந்து கண்களை எடுத்து கொள்ளுமாறு அவர்களது உறவினர்கள் எங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். நாங்கள் சென்று கண்களை எடுத்து வருகிறோம். புனித் ராஜ்குமார் இறந்த பிறகு அவ்வாறு 30 பேரின் கண்களை தானமாக பெற்று கண் பார்வையற்றவர்களுக்கு பொருத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |