Categories
தேசிய செய்திகள்

புனித் ராஜ்குமாரின் கடைசி நேர பரபரப்பு நிமிடங்கள்… குடும்ப மருத்துவர் கூறும் திடுக்கிடும் தகவல்கள்…!!!

நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிடங்கள் குறித்து குடும்ப டாக்டர் ரமண ராவ் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவரது இறுதி சடங்கு இன்று பெங்களூருவில் நடைபெற்றது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து, அவரின் குடும்ப  டாக்டர் ரமண ராவ்  பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “நடிகர் புனித் குமார் மற்றும் அவரது மனைவி அஸ்வினுடன் நேற்று காலை 10 மணி அளவில் தனது மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது அவருக்கு அதிக அளவில் வியர்வை ஏற்பட்டு இருந்தது. ஏன் இவ்வளவு அதிகமாக வேர்வை உள்ளது என்று கேட்டபோது, நான் இப்போதுதான் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வருகின்றேன் எனவும், தனக்கு உடல் சோர்வாக உள்ளது என்ன என்று தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

அவர் எப்போதும் உடல் சோர்வாக இருக்கிறது என்று கூறி என்னிடம் வந்தது இல்லை. முதல் முறையாக அவர் இப்படி இருந்தை நான் பார்த்தேன். எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவருக்கு ஈசிஜி பரிசோதனை செய்தேன். அவரின் இதய செயல்பாட்டில் மாறுதல் ஏற்பட்டு இருந்தது. அப்போது அவருக்கு மாரடைப்பு எதுவும் ஏற்படவில்லை. உடனே நான் விக்ரம் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து, ஒரு மருத்துவ குழுவை தயாராக இருக்கும்படி கூறினேன். அடுத்த ஐந்து நிமிடங்களில் அவர் மருத்துவமனைக்கு சென்றார். அப்போதும் அவருக்கு மாரடைப்பு கிடையாது.

மாரடைப்பு என்றால் அதிகப்படியான வலி ஏற்படும். ஆனால் அவருக்கு வழி இருக்கவில்லை. இதனை நாங்கள் “கார்டியாக் அரெஸ்ட்” என்றும் கூறுவோம். அவருக்கு அது தான் ஏற்பட்டது. அவர் ஒரு சாதாரண நபர் கிடையாது. தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவர். இத்தகைய பிரச்சினை இருக்கும் என்று சந்தேகம் யாருக்கும் ஏற்படவில்லை. அப்படி அவர் அவ்வளவு ஆரோக்கியமாக இருப்பவர். திடீரென்று இந்த பிரச்சினை ஏற்பட்ட காரணத்தினால் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் எனது மனதளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது” என்று அவர் கூறினார்.

 

Categories

Tech |