Categories
தேசிய செய்திகள்

“புனித அந்தோனியார் ஆலய திருவிழா”…. 100 தமிழக பக்தர்களுக்கு அனுமதி…. சூப்பர் அறிவிப்பு….!!!!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. முதல்நாளான இன்று மாலை 5 மணியளவில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்க இருக்கிறது. இதனையடுத்து ஆலயத்தை சுற்றி 14 இடங்களில் சிலுவை பாதை திருப்பலிகள் நடைபெற உள்ளன. இன்று இரவு 8 மணி அளவில் தேர்பவனி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நாளை காலை திருவிழா திருப்பலி நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

இதனை தொடர்ந்து இரவு 9 மணி அளவில் திருவிழா நிறைவு பெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இருந்து 50 பக்தர்கள் மற்றும் இலங்கையில் இருந்து 50 பக்தர்கள் என மொத்தம் 100 தமிழர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மண்டபம் தொடங்கி தனுஷ்கோடி வரை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |