Categories
சினிமா தமிழ் சினிமா

புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ் திரைப்படம்…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!!

மறைந்த புனித் ராஜ்குமாரின் கடைசி படமான ஜேம்ஸ் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இழப்பு கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், சிவராஜ் குமாரின் தம்பியும் ஆவார். இவரின் மறைவுக்கு முன்பாக உருவான படம் ஜேம்ஸ். இந்த படம் மார்ச் 17ஆம் தேதி புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தில் புனித் ராஜ்குமாருக்கு பதிலாக அவரது அண்ணன் சிவராஜ்குமார் டப்பிங் பேசினார். இந்த படத்தில் சரத்குமார், பிரியா ஆனந்த், ஸ்ரீகாந்த் மற்றும் அனு பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர். கர்நாடகாவில் அதிக அளவு திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகியது. இந்நிலையில் ஜேம்ஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை சோனி லீவ் தளத்தில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.

Categories

Tech |