நேற்று புனித வெள்ளியையொட்டி சேலத்தில் உள்ள பல தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றார்கள். அதன்படி நேற்று புனித வெள்ளியானது கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை ஊர்வலமாக நடத்தப்படும். இந்நிலையில் நேற்று சேலத்தில் உள்ள தேவாலயங்களில் சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் சிலுவையை ஒருவர் தூக்கி வர ஆயுத படை வீரர்கள் அவரை சவுக்கால் அடித்த படியே வருவதுதான் சிலுவை பாதை ஊர்வலம் ஆகும்.
சேலத்தில் நடந்த ஊர்வலத்தில் அந்தந்தப் பகுதியில் இருக்கும் தேவாலயத்தில் நடைபெற்ற சிலுவைப்பாதை ஊர்வலத்தில் அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள் பங்கேற்றார்கள். சேலம் மாவட்டத்தில் நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு சேலம் 4ரோடு குழந்தை இயேசு பேராலயம், சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயம், சிஎஸ்ஐ நினைவாலயம், சிஎஸ்ஐ பரிசுத்த ஆலயம், அடைக்கல நகர் ஆலயம், அஸ்தம்பட்டியில் உள்ள சிஎஸ்ஐ இம்மானுவேல் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றதைத் தொடர்ந்து திருப்பலியும் நடந்தது. இதைத் தொடர்ந்து இயேசு உயிர்த்தெழுந்த திருநாளாக நாளை ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.