புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. புனித ஹஜ் பயணிகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி அன்று அல்லது அதற்கு முன் பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், உரை தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலையை நகல், முகவரி சான்றிதழ் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது அதற்கு மேலும் தகவல்களை அறிந்து கொள்ள www.hajcommitee.gov.in என்ற இணையத்தள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
\இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு முன்னதாக விண்ணப்பிக்கும் தேதி சிறிது நாட்களே கொடுக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது பொதுமக்களின் நலனை கருதி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.