நடிகை சினேகா குடும்பத்துடன் பிரபல நடிகை கனிகா செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
புன்னகை அரசி என்று அழைக்கப்படும் நடிகை சினேகாவை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.. தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் தனக்கான ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் சினேகா.. இவர் தமிழில் மாதவன் நடித்த என்னவளே என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி அதன் பின் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.. கமல், விஜய், சூர்யா, என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்..
அதுமட்டுமின்றி மலையாளம், தெலுங்கிலும் நடித்து அசத்திய சினேகா நடிகர் பிரசன்னாவை கல்யாணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். இந்த தம்பதியருக்கு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.. கடைசியாக இவர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்த ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷின் அம்மாவாக நடித்து அசத்தியிருப்பார். தற்போது இவர் துல்கர் சல்மான் நடித்துவரும் வான் படத்தில் நடித்து வருகின்றார்.
இந்தநிலையில் தற்போது நடிகை சினேகா – பிரசன்னா குடும்பத்துடன் பிரபல நடிகை கனிகா தனது கணவருடன் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை கனிகா இருவரும் ‘பைவ் ஸ்டார்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.