சீனாவில் புதிதாக பரவிவரும் புபோனிக் பிளேக்கால் 15 வயது சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டறிய படாமல் ஏராளமான உயிர்கள் உலக அளவில் பறிபோன நிலையில் தற்போது புதிதாக புபோனிக் பிளேக் என்ற புதிய தொற்று சீனாவில் பரவ தொடங்கியுள்ளது. இந்த தொற்றானது மர்மோட் போன்ற காட்டில் வாழும் கொறித்துண்ணி உயிரினங்களிடமிருந்து வருவதாகும். இந்த தொற்றை கண்டறிந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் உயிர் பறிபோய் விடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் மங்கோலியாவின் மேற்கு பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு 15 வயது சிறுவன் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தும் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த புபோனிக் பிளேக் மற்றவர்களுக்கும் பரவுவதற்கான அபாயம் இருப்பதால் மங்கோலியா மற்றும் சீனாவில் சில பகுதிகளில் மூன்றாம் கட்ட எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மர்மோட் இறைச்சியை சாப்பிட வேண்டாம் என்றும் மக்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.