இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் இருந்து தனது திருமணத்திற்காக விடுப்பு எடுத்த பும்ராவின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இரண்டு போட்டியில் மட்டுமே பங்கேற்றார். அதன் பிறகு தனது சொந்த காரணங்களால் மற்ற டெஸ்ட் தொடரிலும் ஒருநாள் டெஸ்ட் தொடரிலும் பங்கேற்பதில்லை என்று கூறி விடுப்பு எடுத்துள்ளார். இதனால் அவர் திடீரென விடுப்பு எடுத்ததற்கு திருமணம் குறித்து பல்வேறு யூகங்களை ஏற்படுத்திய போதும் பும்ரா வாயை திறக்கவில்லை.
இந்நிலையில்கடந்த 15ஆம் தேதி பும்ராவுக்கும் சஞ்சனா கணேஷ்என்பவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றுது .மேலும் பும்ரா பலரின் யூகங்களுக்கு தடை போட்டார். இதனை தொடர்ந்து தனது மனைவி சஞ்சனாவுடன் இருக்கும் புகை படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கடந்த சில தினங்கள் மிகவும் அதிசயமாக உள்ளது என தனது கேப்சனில் பதிவிட்டுள்ளார்.
எங்களுக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த அன்பிற்கும் திருமண வாழ்த்திற்கும் பெரும் நன்றியை கூறியுள்ளார்.பும்ரா தனது திருமணத்தினால் டி 20 இறுதி போட்டியில் பங்கேற்க முடியவில்லை. அடுத்ததாக நடக்க இருக்கும் ஐபிஎலில் அவர் கண்டிப்பாக பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய அணியில் பும்ரா இணைந்தால் போட்டி சிறப்பாக வெற்றி பெரும் என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார்.